• Nov 14 2024

வெங்கட்பிரபு, விஜய் கூட்டணியுடன் நடிகர் ஜெய்யும் இணைகின்றாரா?- தளபதி 68 படத்தின் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் லியோ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.  புதிய கீதை படத்துக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.

அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்தாரோ அதேபோல் இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு வெங்கட் பிரபு மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் வெங்கட் பிரபுவும் கதையை கச்சிதமாக தயார் செய்வார் என்று நம்பப்படுகின்றது.


பொதுவாக வெங்கட் பிரபுவின் படம் என்றாலே அவரது கேங் என கருதப்படும் ஜெய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டோர் ஏதேனும் ஒரு காட்சியிலாவது இடம்பெற்றுவிடுவர். எனவே தளபதி 68 படத்திலும் ஜெய் இருப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பேசுகையில், "தளபதி 68ல் இருக்கிறேனா என்பது குறித்து நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன்.

அந்த அறிவிப்பு வரும் வரையிலுமே இந்த விஷயங்களை வெங்கட் பிரபு அண்ணா ரகசியமாகத்தான் வைத்திருந்தார். நானும் விஜய் அண்ணாவுடன் ரொம்ப நாள் கழித்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதேபோல்வெங்கட் பிரபு அண்ணாவின் படமும் நடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. பார்ட்டிக்கு பிறகு நாங்கள் எந்தப் படமும் பண்ணவில்லை. எனவே ஒருவேளை தளபதி 68 மூலம் அது அமைகிறதா என்று பார்ப்போம்.


ஒருவேளை நான் அதில் இருந்தால்கூட இப்போது என்னால் சொல்ல முடியாது. கண்டிப்பாக தளபதிக்கு ஏற்ற மாதிரி ஒரு மாஸ் படமாக இருக்கும். இப்போது மாநாடு பார்த்தோம் அல்லவா.. அது ஒரு மாஸ் படம் ஆனால் திரைக்கதை புதிதாக இருந்தது. எனவே அது மாதிரி இதில் ஏதாவது வெங்கட் பிரபு புதிதாக செய்வார்" என்ரார். விஜய் நடித்த பகவதி படத்தின் மூலமாகத்தான் ஜெய் திரையுலகில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement