• Sep 20 2024

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பிரபல தயாரிப்பாளரின் மகளா?- அவரின் மாமியார் நடிகையைப் போல உள்ளாரே?

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி 10ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த அவரது மாமியார்.ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கும் நடிகர் தான் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கின்றார்.


குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் மற்றும் கோமாளி ஆகிய திரைப்படங்கள் இவருடைய கெரியரில் முக்கியமான திரைப்படங்களாக அமைந்துள்ளன.இதனைத் தொடர்ந்து அகிலன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இது தவிர மணிரத்னத்தின இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படங்கள் வரும்  இப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் இவர் கடந்த செப்டம்பர் 10ம் தேதி தனது 42வது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் ஜெயம் ரவிக்கு வாழ்த்து கூறினர். ஜெயம் ரவி அவர்களின் மாமியார் சுஜாதா அவர்களும் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்கள்.

மேலும் அவரது மாமியார் சுஜாதா ஹோம் மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார் என்பதும் முக்கியமாகும். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே இவர் தான் ஜெயம் ரவியின் மாமியாரா எனக் கெட்டு வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement