இயக்குநர் நெல்சனின் நண்பரான ரெடின் கிங்ஸ்லி 2010ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா நடித்த வேட்டை மன்னன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நின்றுபோனது. இதையடுத்து நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் ரெடின் நடித்திருந்தார். இதில் பெரிதாக பேசப்படும் வேடம் இல்லையென்றாலும் தனது தனித்துவமான நடிப்பால் யார்ரா இது? என கவனிக்க வைத்தார்.
அவரது தனித்துவமான நடிப்பு ஆர்ஜே பாலாஜிக்கு பிடித்துப்போனதால், தனது முதல் படமான எல்கேஜி படத்தில் நடிக்க வைத்தார். அதன் பின் நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் 'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' கதாபாத்திரத்தில் வரும் ரெடின், நாயகி குடும்பத்தை வைத்தும், யோகி பாபுவுடன் இணைந்தும் அடித்த காமெடி லூட்டிகளுக்கு தியேட்டரில் கரவொலியும் சிரிப்பொலியும் எழுப்பின.
அதற்கு பிறகு நெல்சனின் பீஸ்ட் படத்திலும் நடித்தார். மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்திலும் அவர் நடித்து இருந்தார்.இதனை அடுத்தும் இவருக்கு படவாய்ப்புக்கள் குவிந்தவாறு தான் இருக்கின்றன.ரெடின் கிங்ஸ்லி படங்களில் காமெடியனாக நடித்தாலும் அவர் நிஜத்தில் ஒரு கோடீஸ்வரரர் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இவர் குறித்து அண்மையில் அளித்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது ரெடின் தமிழ்நாடு முழுக்க கண்காட்சி நடத்தும் தொழில் செய்து வருகிறார் எனவும், அதன் மூலம் அவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்றும் கூறி இருக்கிறார்.மேலும் அவர் அதிகம் மதிப்புள்ள சொகுசு காரையும் வைத்திருக்கிறாராம் என்றும் கூறி இருக்கின்றார்.
Listen News!