• Nov 10 2024

சரத்பாபு வில்லன் நடிகர் நம்பியாரின் மருமகனா? நடிகை ரமா பிரபாவால் வந்த சோதனை..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் சரத் பாபு.கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரத்பாபு தற்போது காலமானார்.

இந்நிலையில், உயிரிழந்த சரத்பாபுவின் மனைவி, குடும்பம் குறித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் சரத்பாபு. நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், நினைத்தாலே இனிக்கும், உதிரிப்பூக்கள், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, ஆளவந்தான், பாபா உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான படங்களில் ரஜினியின் நண்பராக நடித்துள்ள சரத்பாபு, கே பாலச்சந்தர், மகேந்திரன் போன்ற முன்னணி இயக்குநர்களின் ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சரத்பாபு மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சரத்பாபு பிரபல வில்லன் நடிகர் மறைந்த நம்பியாரின் மருமகன் என்பது பலரும் அறியாத உண்மை. பிரபல வில்லன் நடிகரான நம்பியாரின் மகள் சினேகா, கோவிந்த் மேனன் என்பவரை 1968ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். ஆனால், அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் 1990ல் சரத்பாபுவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் சினேகா நம்பியார்.ஆனால், சரத்பாபு - சினேகாவின் திருமணமும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. 

சரத்பாபு தன்னை மனரீதியாக துன்புறுத்துவதாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். பின்னர் சரத்பாபுவை விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 70, 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரமாபிரபா உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார் சரத்பாபு. தன்னைவிட 5 வயது அதிகமான ரமாபிரபாவுடன் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளார் சரத்பாபு.

அதேநேரம், ரமாபிரபாவிடம் இருந்த சொத்துகளை சரத்பாபு ஏமாற்றி வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. சென்னையின் மிக முக்கியமான ஏரியாவில் விலை மதிப்புமிக்க சொத்துக்கு உரிமையாளரான ரமாபிரபா, சரத்பாபுவிடம் தனது சொத்துகள் முழுவதையும் இழந்துள்ளார். ஆனால், ரமாபிரபாவின் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை அது பொய் என சரத்பாபுவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement