தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநர்களான பாலா, சேது,அமீர் போன்றவர்களின் துணை இயக்குநராக இருந்தவர் தான் சசிகுமார். இதனை அடுத்து இயக்குநராக சுப்பிரமணிய புரம் என்னும் படத்தினை இயக்கி இவரே நடித்திருந்தார். இவரின் இந்த முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையும் கொண்ட இவரது நடிப்பில் இறுதியாக அயோத்தி என்னும் திரைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் காரணமாக தமிழ் சினிமாவில் இருந்து அளிக்க முடியாத இடத்தை அயோத்தி திரைப்படம் பிடித்துவிட்டது.
சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக பகைவனுக்கும் அருள்வாய், நந்தன் ஆகிய படங்களை உருவாகி வருகிறது. என்னதான் சசிகுமார் நடிகராக பயணித்து வந்தாலும், அவருடைய இயக்கத்தில் ஈசன் படத்திற்கு பின் எந்த ஒரு படமும் வரவில்லை.இதனால் இவரது இயக்கத்தில் எப்போது படம் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
ஆனால், கண்டிப்பாக தன்னுடைய இயக்கத்தில் அடுத்த ஆண்டு படம் வரும் என பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். இதனால் ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சசிகுமாரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சசிகுமாரின் முழு சொத்து மதிப்பு மட்டுமின்றி ரூ. 32 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், அது எந்த அளவிற்கு உண்மையானது என்பது தெரியவில்லை.
Listen News!