• Sep 20 2024

நடிகர் சிம்பு கேட்கும் சம்பளம் இத்தனை கோடிகளா ? தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் சிம்பு கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் தீவிர உடற்பயிற்சி மற்றும் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்ததன் மூலம் உடல் எடையை மளமளவென குறைத்து ஸ்லிம் ஆகினார்.

 அவர் உடல் எடையை குறைத்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின என்றே சொல்லாம் அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்  ஆகி இருந்தது.

வெங்கட் பிரபு இயக்கிய அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதையடுத்து சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன வெந்து தணிந்தது காடு திரைப்படமும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தை கவுதம் மேனன் இயக்கி இருந்தார். விரைவில் அப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்த்க்கது.

இவ்வரக்கத் தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் சிம்பு தன் சம்பளத்தை மளமளவென உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது. 

தற்போது ஒரு படத்துக்கு ரூ.20 முதல் 25 கோடி வரை வாங்கி வரும் சிம்பு, புதிதாக கதை சொல்ல வரும் தயாரிப்பாளர்களிடம் ரூ.40 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.

இதனால் சிம்புவிடம் கதை சொல்ல செல்லும் தயாரிப்பாளர்கள் தெறித்தோடுகிறார்களாம். அண்மையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் தளபதி 67 ஆகிய படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் லலித் குமார், சிம்புவிடம் தங்களது தயாரிப்பில் ஒரு படம் நடிக்குமாறு கேட்க சென்றாராம். அப்போது சிம்பு கேட்ட சம்பளத்தால் பின்வாங்கிவிட்டாராம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பட வாய்ப்பு இன்றி தவித்த சிம்புவுக்கு தற்போது பட வாய்ப்பு குவிந்து வேகமாக  உயர்ந்து வரும் சமயத்தில் கோடிகளை நம்பி வாய்ப்புகளை தவறவிடுவதாக கூறப்படுகிறது. வந்த வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தினால் தான் சிம்புவால் உச்சத்தை தொட முடியும் என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement