தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே வெற்றி இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
அதிலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் வேற லெவலில் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்திின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது. மேலும் இந்த படம் LCU-வில் இருக்குமா என கேள்வி எழுந்திருக்கிறது.
இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருகிறார்கள். இதற்கு முன்பு இருவரின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக தளபதி 67ல் நடிக்க போகிறார் பல தகவல்கள் வந்து கொண்டுயிருக்கிறது.
இது குறித்து த்ரிஷாவிடம் பேட்டியின் போது கேட்டுள்ளனர். "இதற்கு நான் அடுத்த வருடம் பதில் அளிக்கிறேன். சிறிது காலம் காத்திருங்கள்" என்று பதில் அளித்துள்ளார். இவர் பேசிய வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வீடியோவை நடிகர் சூர்யா லைக் செய்துவிட்டு, சிறிது நேரத்திலேயே அதை unlike செய்துவிட்டார். இதனால் சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்தது போல தளபதி 67 படத்திலும் வர போகிறார் என்று இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!