தமிழ் திரையுலகை பொறுத்தவரை சிவாஜி மற்றும் எம்ஜிஆர் அவர்கள் வரிசையில் நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் வைத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே. அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார். சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றதோடு தலைவர் என ரசிகர்கள் அழைக்கும்படி தனது நற்பண்புகளையும் கொண்டுள்ளவர். பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர் என்று தான் கூற வேண்டும்.
மேலும் 70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. தற்போது, இவர் நடிப்பில் உருவாகி வரும் தலைவர்169 திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில், 2007ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்த ‘சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைகிறது. மணிவண்ணன், வடிவுக்கரசி, விவேக், ஸ்ரேயா, சாலமன் பாப்பையா, சுமன் போன்ற பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
பாட்ஷா, படையப்பா படங்களை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் அவர்களின் ஸ்டைலை இதில் பார்க்க முடிந்தது. இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக ரஜினிகாந்துடன் கைகோர்த்து வெளியான படம் ‘சிவாஜி’. பாடல்கள் முதல் பின்னணி இசை வரை ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு மிகச் சிறப்பாக பணியாற்றியிருந்தார்.இந்நிலையில் சிவாஜி படத்தின் 15 வது ஆண்டு கொண்டாட்டத்தின் அம்சமாக, படத்தின் ஷூட்டிங் காட்சிகள் சிலவற்றை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் வெளியிட்டிருந்தது.
சிவாஜி திரைப்படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆன நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சென்று சந்தித்தார் இயக்குநர் ஷங்கர். தற்போது சிவாஜி படத்திற்கும், சிவாஜி படத்தில் பணிபுரிந்த அனைவரும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள ஆடியோ வெளியாகி வைரலானது.
எனினும் இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது சிவகார்த்திகேயனும் டீவ்ட் ஒன்று செய்துள்ளார். அதில் அவர், நான் சிவாஜி படத்தை 15 முறை தியேட்டரில் பார்த்து இருக்கிறேன். சூப்பரான மாசான படம் என்று தலைவரைப் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார்.இந்த ட்வீட் சோஷல் மீடியாவில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும், நீங்கள் தலைவர் ரசிகர் என்று தெரியும். ஆனால், இப்படி எல்லாம் பொய் சொல்ல கூடாது. 15 முறை நீங்கள் படம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் பொய் என்று சிவகார்த்திகேயன் ட்விட்டை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வந்தனர்.
அத்தோடு ரஜினிகாந்த் அவர்களுக்கு பொது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபல ரசிகர்களும் அதிகம். சிவகார்த்திகேயன், தளபதி விஜய் அனைவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள்.நடிகர் விஜய் அளித்திருந்த பழைய பேட்டியொன்றில் ரஜினியின் ஒரு திரைப்படத்தை திரையரங்கில் 17 முறைக்கு மேல் பார்த்ததாக சொல்லியுள்ளார். இதனால் தற்போது விஜய், சிவகார்த்திகேயனை விட மிகவும் தீவிரமான ரஜினியின் ரசிகர் என பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அமிதாப் பக்சனை அடுத்து கமலுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள்..!
- குழந்தையை பறிகொடுத்த நடிகர் படவா கோபி யாருக்கும் தெரியாமல் செய்யும் செயல்..!
- எதிர் நீச்சல் சீரியல் நடிகைக்கு திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகிவிட்டதா..?அவரே பதிவிட்ட பதிவு..!
- எனக்கு இந்த நடிகர் மட்டும் தான் நண்பன்.. ராகவா லோரன்ஸ்
- பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்-சிம்பிளாக நடத்தி முடித்து விட்டார்களே…வைரலாகும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!