• Sep 20 2024

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குகின்றாரா?- அவருடைய செயலாளர் வெளியிட்ட தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு திரைப்படம் வெளியானதுமே லியோ ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ கேங்ஸ்டர் ஜானர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் 60 நாட்களில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய்யின் தளபதி 68 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாம். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் இருவரும் தளபதி 68 இயக்குநர் லிஸ்ட்டில் இருந்த நிலையில், விஜய் கோபிசந்த் மலினேனியை டிக் செய்துள்ளாராம். 


லியோவைத் தொடர்ந்து தளபதி 68 படத்திலும் த்ரிஷா தான் நாயகி என சொல்லப்பட்டது. அதேபோல், வாரிசு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் விஜய்க்கு தூதுவிட்டிருந்தாராம் என்றும் கூறப்படுகின்றது.

இப்படியான நிலையில் சென்னையில் அடுத்த மாதம் விஜய் தலைமையில் +2 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் கலந்து கொள்ளும் நிர்வாகிகள் வேறு கட்சி அல்லது இயக்கத்தில் இருக்கக் கூடாது என விஜய் மக்ககள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என்பவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement