தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறாவிட்டாலும் வசூலில் அள்ளிக்குவித்து விடும் என்பது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இவர் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.இந்தப் படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதா கூறப்படுகிறது.
இதனிடையே தன்னுடைய அப்பா சந்திரசேகர் மீதான மனக்கசப்பு காரணமாக தொடர்ந்து தனது பெற்றோரை சந்திக்காமல் உள்ளார் விஜய். இந்த விஷயம் பல விமர்சனங்களை தொடர்ந்து எழுப்பி வருகிறது. தொடர்ந்து சந்திரசேகர் தன்னை தன்னுடைய மகன் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார்.
அப்பா மீது இருக்கும் கோபத்தால் தாய் ஷோபாவையும் அவர் சந்திக்காமல் உள்ளார்.ஆனால் ஷோபா சந்திரசேகர் தொடர்ந்து தன்னுடைய மகனின் இளமைக்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை தொடர்ந்து தனியார் ஊடகத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் விஜய்யின் நண்பர்கள் குறித்து அவர் தற்போது பகிர்ந்துள்ளார். ஸ்ரீநாத், சஞ்சீவ், மனோஜ் மற்றும் ராம்குமார் என 4 நண்பர்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
இந்த கல்லூரி நட்பு தற்போதுவரை தொடர்ந்து வருவதாகவும், இதில் ஸ்ரீநாத், சஞ்சீவ் மட்டுமே சினிமாத்துறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் 5 பேரும் சேர்ந்துவிட்டால், ஸ்ரீநாத்தின் குரல்தான் ஓங்கி இருக்கும் என்றும் அவரின் நகைச்சுவைகளுக்கு விஜய்யின் சிரிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் 5 பேரும் இணைந்து நுங்கம்பாக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் கூடி தினந்தோறும் பேசி அரட்டை அடிப்பார்கள் என்றும் வீட்டில் இவர்கள் அனைவரும் வந்துவிட்டால் அன்றைய தினம் அசைவ விருந்தும் களைகட்டும் என்றும் ஷோபா சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
படங்களில் அதிகமாக நகைச்சுவை செய்துவரும் விஜய், நிஜத்தில் மிகவும் சைலண்டானவர். அவரை கல்லூரி காலங்களில் அதிகமாக சிரிக்க வைத்த நட்பு தொடர வேண்டும் என்பதே அவரது அம்மாவின் விருப்பமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் கிடைத்த கௌரவம்
- இயக்குநர் மணிரத்தினத்திற்கு கொரோனாத் தொற்று ஏற்படவில்லை- உறுதி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை
- யாரு இந்த பொண்ணுங்க…அஜித் ஏன் இவ்வளவு அடக்கமாக நிற்கிறார்-டிரெண்டாகும் லேட்டஸ்ட் போட்டோ.
- செம த்ரில்லிங் மற்றும் விறுவிறுப்பு நிறைந்த விக்டிம் வெப் சீரியலின் ட்ரெய்லர்-நடிப்பில் மிரட்டி எடுக்கும் அமலாபால்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!