• Nov 11 2024

அரசியலுக்குள் நுழைகின்றாரா நடிகர் விஷால்; அவரே கூறிய விடயம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க உறுப்பினர் என பன்முகம் கொண்ட ஒருவராக இருந்து வருகின்றார். இவர் பிறப்பினால் தெலுங்கு மொழியை சார்ந்தவராக இருந்தாலும் பிரபலமானது என்னவோ தமிழ்த் திரைப்படங்களின் வாயிலாகத் தான்.

'செல்லமே' என்ற திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் நடிப்பில் மட்டுமன்றி அரசியலிலும் ரசனை கொண்டவர். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல் ஹாசன் இவர்களில் யார் அரசியலுக்கு வருவார் என்று எல்லோருமே எதிர்பார்த்திருந்த நேரம் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஷால்.

இந்நிலையில் நடிகர் விஷால் ஆந்திர அரசியலில் நுழைகிறார் என்றும், அவர் YSR காங்கிரஸ் சார்பில், சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடப் போகிறார் என்றும் சமீபத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததாகவும் செய்திகள் பலவிதமாக வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் ட்விட்டரில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில் தன்னுடைய அரசியல் நுழைவு பற்றி பரவி வரும் தகவலிற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது ஆந்திர அரசியலில் தான் நுழையப் போவதாக வெளி வரும் செய்திகள் தவறு. ஆந்திர அரசியலில் நுழைவதோ, சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியிடவோ வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. அது குறித்து பரவும் செய்திகள் தவறானவை, வதந்திகளை நம்பாதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் விஷால் இதுவரை காலமும் அதுபற்றி தன்னிடம் யாரும் பேசவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு சினிமா மட்டுமே இப்போதைக்கு முக்கியம் என்றும் ஆந்திரா அரசியலில் நுழையும் எண்ணம் சுத்தமாக இல்லை எனவும் அவ் ட்விட்டர் பதிவினூடாக கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement