தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் முக்கிய நடிகை தான் அம்மு அபிராமி. இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும் இப்படம் இவருகடகு நல்ல வரவேற்பைக் கொடுக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சனன் படத்தில் அம்மு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படமே இவரை சிறந்த நடிகையாக அறியச் செய்தது. இப்படத்தின் மூலம் தான் அம்மு அபிராமி என்று அழைக்கப்படுகின்றார்.
தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த அசுரன் படத்திலும் தீரன் அதிகாரம் ஒன்று ,என் ஆளோட செருப்பைக் காணோம், போன்ற படங்களிலும் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராகவும் களமிறங்கி 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அண்மையில் நடிகை அம்மு அபிராமி தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்க்கு பதிலளித்த அம்மு அபிராமி, ' எனக்கு தற்போது 22 வயது ஆகிறது. இந்த வயதில் திருமணம் செய்வதை விட எனக்கு பல இலக்குகள் உள்ளன. திருமணம் செய்து கொள்ள எது சரியான நேரம் என்று நான் நினைக்கும் பொழுது திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்துள்ளார்.
Listen News!