• Sep 20 2024

நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- ஒரு படத்திற்கு சம்பளம் எவ்வளவு வாங்குகின்றார் தெரியுமா?

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 2000 ஆவது ஆண்டுகளில் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. க்யூட்டான முகபாவனை மூலம் ரசிகர்களை மிக எளிதாக கவர்ந்தார் ஜோதிகா. மும்பையில் இருந்து வந்து தமிழே தெரியாமல் இன்று தமிழ் நாட்டின் மருமகளாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் நடித்த ஜோதிகா முதலில் அறிமுகமான படம் ஹிந்தியில் தான். அதன் பின் வாலி படத்தில் தான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து தான் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.


மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோதிகா நடித்த சந்தரமுகி திரைப்படம் அவரின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.மேலும் இவர் நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் முடித்திருப்பதோடு இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர்.இப்போதும் ஒரு படத்துக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

 அதுமட்டும் இல்லாமல் விளம்பரங்கள் மூலமும் அவருக்கு கோடிகளில் வருமானம் கிடைக்கிறது. சென்னையில் பெரிய பங்களா, BMW கார்கள் என ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 300 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement