• Nov 19 2024

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யப் போகின்றாரா?- அதற்காகத் தான் நைட் பார்ட்டி வைத்தாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ஏகப்பட்ட தமிழ் சினிமா நடிகைகள் திருமணம் செய்து வருகின்றனர். நிக்கி கல்ராணி, நயன்தாரா திருமணங்களை தொடர்ந்து ஹன்சிகா திருமண அறிவிப்பு வெளியானது. தற்போது நடிகை தமன்னாவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.


இந்நிலையில், அடுத்து அந்த பட்டியலில் இருக்கும் கீர்த்தி சுரேஷும் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனது பெற்றோரின்  பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.


இதனை அடுத்து அண்மையில் பிரபல நடிகைகளுடன் இணைந்து நைட் பார்ட்டி கொண்டாடி இருந்தார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை கீர்த்தி சுரேஷிற்கு திருமணமாக இருக்குமோ? அதனால தான் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டாரா எனக் கேட்டு வருகின்றனர்.

மேலும் கீர்த்தி சுரேஷ் நானியுடன் இணைந்து தசரா என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படமாவது தனக்கு கை கொடுக்கும் என நம்பி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.









Advertisement

Advertisement