• Nov 17 2024

நடிகை பிரியா பவானி சங்கரின் அம்மா இப்படியொரு கொடூர நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா?- கண்ணீர் மல்க கூறிய நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.இதன்பின், மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும், தற்போது தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.


மேலும் தற்பொழுது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில் இவர் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் தன்னுடைய அம்மாவுக்கு கடந்த வருடம் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறி கண்கலங்கி இருக்கிறார்.அது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் குணப்படுதிவிடலாம் என மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement