• Nov 10 2024

இந்த வயசில இதெல்லாம் தேவையா ? தன் துணிக்கடைக்காக வனிதா செய்துள்ள விஷயம்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துப் பிரபலமாகியிருந்தார்.கதாநாயகியாக பிரபலமாகி இருந்த இவர் கடந்த சில வருடங்களாக சர்ச்சை நாயகியாகவே பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றார். அதற்கு காரணம் இவர் பல திருமணங்கள் செய்தமையே ஆகும்.

இவ்வாறுஇருக்கையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இருந்தும் இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் காத்து என்ற படத்திற்கு நடனம் ஆடி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார். அத்தோடு, இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

எனினும் இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றியம் கடந்த ஆண்டு தொடங்கினார்.மேலும் இப்படி வனிதா அவர்கள் நடிப்பை தவிர பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா வாழ்க்கையே மாறிவிட்டது என்று கூறலாம். தற்போது இவர் தனியாக boutique ஒன்றை நடத்தி வருகிறார். முன்பு போல் இல்லாமல் இப்போது வனிதா பயங்கர மாடர்னாகவும் மாறிவிட்டார்.

இந்த நிலையில் வனிதாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது, வனிதா அவர்கள் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பொம்மைகளுக்கு டிரஸ் போட்டு போஸ் கொடுப்பதை போல வனிதாவும் ஆடை அணிந்து மாடலிங் செய்து இருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஆடை விற்க என்ன பண்றீங்க? மாடலிங் பண்ண வேண்டிய வயசா உங்களுக்கு என்றெல்லாம் கமெண்ட் போட்டு வனிதாவை கேலி செய்து வருகிறார்கள். அத்தோடு், நீங்க யூஸ் பண்ண ட்ரெஸ்ஸ தான் கடைல விக்கிறீங்களா என்றும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement