• Sep 20 2024

கண்ணன் ஜெயிலுக்குள் இருக்கும் போது இதெல்லாம் தேவையா ஜீவா- முல்லையுடன் செய்த அலப்பறை- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனதில் இடம் பிடித்த பல சீரியல் நட்சத்திரங்கள் இருக்கின்றனர்.இவர்களில் அனைவராலும் அறியப்பட்ட சீரியல் நடிகர் தான் வெங்கட்.இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் தனது சினிமாப் பயணத்தை ஆரம்பித்தார்.

மேலும் அதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவர் தற்பொழுது நடித்து வரும் ரோஜா சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆகியவையே ரசிகர்களிடம் இவரைப் பிரபல்யப்படுத்தியது.


சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் வெங்கட் அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வார்.அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்ணன் ஜெயிலுக்குள் இருக்கும் போது இப்படியொரு குத்தாட்டம் போறீங்களே இது நியாயமா இருக்கா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement