விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றது. சொல்லப்போனால் பொதுவாக விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்படத்திற்கு கூடுதலான எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.அதற்கு மிகமுக்கிய காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான்.
மேலும் லியோ படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகின்றது. சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலி கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றது. குறிப்பாக 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா லியோ படத்தில் நடித்து வருகின்றார்.
இதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் படமாக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் தற்போது லியோ படத்திலிருந்து வெளியான அறிவிப்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்நிலையில் லியோ படத்தில் அர்ஜுன் நடிக்கவிருக்கும் கதாபாத்திரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், ஆரம்பத்தில் அர்ஜுன் விஜய்க்கு நண்பராக இருக்கிறாராம். கடைசியில் சில விஷயத்தால் விஜய்க்கு துரோகம் செய்துவிட்டு வில்லனாக மாறுவது போன்ற ரோலில் தான் அர்ஜுன் நடிக்கப்போவதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர். ஆனால் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக கூறவில்லை.
Listen News!