• Sep 20 2024

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அருண் பிரசாத் வெளியேறுகின்றாரா?- அவருக்கு பதிலாக நடிக்கப் போவது இவரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கி வருவதோடு கடந்த 2019ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீரியலில் கதாநாயகனாக அருண்பிரசாத் நடித்து வருவதோடு கதாநாயகியாக ரோஷினி நடித்திருந்தார். பின் ரோஷினி சில காரணங்களால் திடீரென வெளியேறினார். அதன் பின் அகிலன், அஞ்சலி போன்ற வேடங்களில் நடித்தவர்களும் மாறினார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த சீரியலில் பாரதி வேடத்தில் நடித்துவரும் அருண் பிரசாத் தொடரில் இருந்து வெளியேறுகிறார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மேலும் அருண் பிரசாத்திற்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடரில் பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ் பாரதி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பதும் முக்கியமாகும்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement