விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமானவர் தான் நடிகை பாவனி.இவர் இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானவர்.அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக டான்ஸ் மாஸ்டர் அமீர் அறிமுகமானார்.
அமீர் என்ட்ரி கொடுத்ததில் இருந்து பாவனியை காதலிப்பதாகவும் வெளிப்படையாக கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவரது காதலை பாவனி ஏற்றுக் கொள்ளவில்லை.பிக்பாஸ் ஜோடி என்னும் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து நடனமாடியிருந்தார்கள்.இதில் இருவரும் டைட்டில் வின்னர் ஆனதோடு தற்பொழுது காதலித்தும் வருகின்றனர்.
அதற்கு பிறகு அடிக்கடி இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் அஜித் நடித்த துணிவு படத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாக காதலர்களாக நடித்திருந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.அந்த நிகழ்ச்சியில் தண்ணீருக்குள் இவர்கள் இருவரும் அதிக நேரம் இருக்கும்படி ஒரு டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் சிறிது நேரத்திலேயே தன்னால் முடியவில்லை என்று பாவனி கூறிவிட்டார்.அப்போது பாவனிக்கு வாந்தி வந்திருக்கிறது. தலை சுற்றவும் செய்திருக்கிறது. முன்பு இவர்களிடம் ஒரு பேப்பரில் சைன் வாங்கி இருக்கின்றனர்.அதில் முக்கியமாக நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கு படித்துக் காண்பிக்க கேட்ட பாவனியிடம் அமீர் நீ கர்ப்பமாகத்தான் இருக்கிறாய் ஆமாம் என்று போடு என்று சொல்ல, பாவனி அதிர்ச்சி அடைகிறார். நான் எங்க அப்படி இருக்கிறேன் என்று சொல்ல, எப்படியும் ஒரு நாள் கர்ப்பமாக தானே போகிறாய் என்று சொல்லி சமாளிக்கிறார். தற்போது இந்த கிளிப்ஸ்கள் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து நீங்கள் இருவரும் சீக்கிரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே என்று அறிவுரை கூறி வரும் நிலையில், அதற்கு அமீர் நாங்கள் இப்போதுதான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறோம்.தற்போது சில வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது. அதனால் கொஞ்ச நாட்கள் காதலர்களாக சுற்றி விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
Listen News!