இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'ஜெயிலர்' படத்தில் நடிக்கும் நான்கு நடிகர்கள் யார் யார் என்பதை படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.
நடகர் ரஜினிகாந்தின் 169 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 22 ஆம் தேதி, வெளியிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியதை அறிவித்தது படக்குழு. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த படத்தில், 'எந்திரன்' படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தீயாயக பரவி இருந்தாலும், இதுகுறித்து தற்போது வரை, உறுதியான தகவல் வெளியாகவில்லை.
ஆனால் நடிகை ரம்யா கிருஷ்ணன், காமெடி நடிகர் யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன், மற்றும் தரமணி நடிகர் வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த தகவலை 'ஜெயிலர்' படத்தை தயாரிக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அத்தோடு மற்ற நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இப்படம், 2023ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வரும் நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், பருத்திவீரன் திரைப்படம் புகழ் சரவணன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். அவர் இப்படத்தின் நெகட்டிவ் ரோலில் நடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
Listen News!