ரஷ்ய கொலைகாரர் அலெக்ஸாண்டர் ஸ்பெசிஃப்ட்செஃப் குறித்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ராட்சசன். சிறு வயதில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அலெக்ஸாண்டர், எழுபதுகளில் தனது தாயின் துணையுடன் குழந்தைகளைக் கடத்தி கொன்றுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ராட்சசன் திரைப்படம்.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்று நிலவிய நம்பிக்கையை கருப்பொருளாகக் கொண்டு முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம்குமாரின் இரண்டாவது படம் தான் இது.படத்தில் வில்லன் நடிகராக நடித்திருந்த கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் மறக்க முடியாத ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் யாசர்.
இவர் ராட்சசன் திரைப்படத்தில் ஒரு பேட்டியில் தனது வில்லன் கதாபாத்திர நடிப்பு அனுபவங்களை பாகின்ற்க்கொண்டிருந்தார்.அதனை தொகுத்து இங்கே பார்ப்போம்.
''ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி சின்ன சின்ன படங்கள் பண்ணிக்கிட்டு இருந்தன். ராட்சசன் படத்தில் விலாளனாக நடித்திருந்தேன் கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தமையானது எனக்கு ஒரு அடையாளத்தினை தந்திருந்தது.படம் பார்க்கும்போது ஆடியன்ஸ் அசிங்கசிங்கமாக திட்டிருப்பாங்க.ஒரு நடிகனாக அதான் பாராட்டு. அவர்கள் அப்படி திட்டும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும்.''நம்மளையும் வில்லனா மதிச்சு திட்டுறான் பாரு..அவன் தாண்டா எனக்கு சாமி ''அப்பிடின்னு நினைச்சன் .அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு.
ஒரு சீன கிடைக்காத எண்டு அவ்ளோ கஸ்டப்பட்டிருக்கன்..இந்த நிலையில் தெலுங்கு படத்திற்கு வில்லன் கதாப்பாத்திரத்திற்கு கூடப்பிட்ட பொது நான் ஜெயிச்சிட்டன் என்று தோணிச்சு.இயக்குநர் ராம் சார் கஸ்டப்படுபவர்களுக்கு நிறைய பேருக்கு படவாய்ப்பு குடுத்திருக்காரு. கிறிஸ்டோபர் என்ற கதாபாத்திரம் என்பது எனக்கு கிடைச்ச கிப்ட் தான் இன்னைக்கு வரைக்கும். நிறைய பேர் பாராட்டி இருக்காங்க.என்ன பார்த்தாலே சின்ன பொண்ணுங்க எல்லாம் பயப்படுவாங்க.
நெல்சன் சாரிண்ட பிரண்ட்ஸ் பரணி சார் ,பீஸ்ட் படம் பண்ணும் போது விஜய் சாரிட்ட என்னை பத்தி சொல்லியிருக்காரு .அப்போ என்னை கூப்பிட சொல்லி சந்திச்சாரு.நீங்களா அது படம் செமையா இருந்துச்சு நிறைய விஷயங்கள் கேட்டாரு.எப்படி சினிமாவுக்குள்ள வந்தீங்க. என்று நிறைய கேட்டாரு.நான் ஒண்ணுமே பண்ணல இப்போ தான் கொஞ்சம்,கொஞ்சமா ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு இருக்கன்.
எனக்கு 4,5 விஷயங்கள் அட்வைஸ் பண்ணினாரு ,சினிமாவில் இப்படி இருக்கோணும், பியூட்சர்ல் பெரிய ஸ்டாரா வருவீங்க..எனக்காக டைம் எடுத்து பேசினாரு.'' என்றார்.
இறுதியாக பேட்டியில் காஷ்மீர் போன சொல்லோணும் சொல்லுவீங்களா?என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ,அப்படி போன கண்டிப்பா சொல்லுவன் என்று கூயிருந்தார் .ஒரு வேளை லியோ படத்தில் யாசர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உண்மையான தகவல் கிடைக்கும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!