• Sep 20 2024

குக் வித் கோமாளி சீசன் 2 பெஸ்ட்டா? சீசன் 3 பெஸ்ட்டா.?- ஸ்ராட் மியூசிக் ஷோவில் பங்கம் செய்த குரேஷி- ப்ரியங்கா கேட்ட கேள்வி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 இன் இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 2 மற்றும் சீசன் 3 யிலிருந்து சந்தோஷ் பிரதாப், ரக்சன், குரேஷி, புகழ், அம்மு அபிராமி பவித்ரா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கின்றனர். 


இந்த நிகழ்ச்சியின் 4வது சீசனையும் ப்ரியங்கா தான் தொகுத்து வழங்குகின்றார்.தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பவித்ராவும் சீசன் 3 யில் இருந்து சந்தோஷ் பிரதாப் மற்றும் அம்மு அபிராமி ஆகிய இருவரும் வந்துள்ளனர். மேலும் ரக்சன், புகழ், குரேஷி ஆகிய மூவரும் இணைந்து வந்துள்ளனர்.


இதில் பிரியங்கா சீசன் 2 பெஸ்ட்டா சீசன் 3 பெஸ்ட்டா என கேட்க, சின்ன குழந்தைக்கு கூட தெரியும் சீசன் 2 தான் பெஸ்ட் என்று கலாய்க்கிறார் குரேஷி. பின்னர் சீசன் 3 அதைவிட பெஸ்ட் என்று சமாளிக்கிறார். காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement