இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் கே.எல்.ராகுல். எனினும் இவர் தற்போது இவ்வணியில் இருந்து ஓய்வில் இருக்கின்றார். இதற்குக் காரணம் என்னவெனில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது தன்னுடைய சிகிச்சையின் நிமித்தம் முனீச் சென்றுள்ளார். அவருடன் இணைந்து அவருக்குத் துணையாக பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் முனீச் சென்றுள்ளார்.
வாரிசு நடிகையான அதியா ஷெட்டி என்பவர் யாரெனில் பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சுனில் ஷெட்டியின் மகளாவார். சுனில் ஷெட்டி பாலிவுட்டில் மட்டுமல்லாது தமிழிலும் ரஜினியின் 'தர்பார்' என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரரான ராகுலும், அதியா ஷெட்டியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளிநாடுகளுக்கு ஜாலியாக சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் மகளின் காதலுக்கு எந்தவிதமான எதிர்ப்பையோ, மறுப்பையோ தெரிவிக்காத சுனில் ஷெட்டி, அதியாவின் விருப்பம் எதுவோ அவர் அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டார். இதனிடையே கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு இன்னும் மூன்று மாதங்களில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடக்க இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளை அதியா மற்றும் ராகுலின் குடும்பத்தினர் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை என்று தெரியாமல் குழம்பி போயிருந்த அனைவருக்கும் கருத்துக் கூறும் வகையில் மகளின் திருமண வதந்தி குறித்து பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தற்போது விளக்கம் ஒன்றினை
அளித்துள்ளார். அதாவது கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் குறித்து பரவி வரும் தகவல்களில் எந்த விதமான உண்மையும் இல்லை என அவர் மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் "திருமணம் குறித்த எந்தவித ஏற்பாடுகளையும் நாங்கள் செய்யவில்லை" எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் சுனில் ஷெட்டி.
பிற செய்திகள்
- சந்தானத்தின் ‘குலு குலு’ படத்தைக் கைப்பற்றிய நண்பன்…. யார் தெரியுமா?
- வெள்ளிவிழா நாயகன் மோகனின் பொற்காலம்
- விக்ரம் வராமைக்கான உண்மைக் காரணம் இதுவா?… வெளியாகும் தகவல்
- பாவாடை, தாவணியில் ரசிகர்களை மயக்கும் நடிகை டாப்ஸி…ஜொள்ளு விடும் ரசிகர்கள்
- “எனது கணவர் இப்போது வேறு திருமணம் செய்து விட்டார்”…மனம் திறந்த பிக்பாஸ் பிரபலம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!