• Sep 20 2024

ஜவான் படத்தில் நடிக்க தீபிகா படுகோன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- நயன்தாராவை விட அதிகமாக இருக்கே..

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் ரசிகர்களால் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் ஷாருக்கான்.இவர் நடிப்பில் கடைசியாக பதான் வெளிவந்து உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.இப்படம் வருகின்ற செப்டெம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது.


ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் சிறப்பு வேடத்தில் நடித்திருக்கின்றார்.


இப்படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 11 கோடி சம்பளம் வாங்கியுள்ள நிலையில் தீபிகா படுகோன் ரூ. 17 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.அதேபோல் விஜய் சேதுபதி இப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 21 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement