• Nov 14 2024

மெகா சீரியலை ஸ்லோ மோஷனில் வைத்து எடுத்த படமா 'டெவில்'..? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விதார்த், பூர்ணா ஆகியோரின் நடிப்பில், இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் டெவில்.

இந்தத் திரைப்படம் தற்போது வெளியான நிலையில், இது குறித்து விமர்சனம் பண்ணி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதன்படி அவர் கூறுகையில்,

டெவில் படத்தின் தொடக்கத்திலேயே ஹீரோயின் கார் ஒன்றை விரக்தியில்  ஒட்டிக்கொண்டு வருவது போல் காட்டுகிறார்கள். அந்தக் கார் ஒரு பைக் மீது மோத, அதில் வந்த இளைஞரின் கை உடைந்து விடுகிறது. அதற்குப் பின் அந்த இளைஞனை மருத்துவமனையில் சேர்த்து முழுச் செலவையும் ஹீரோயினே  பார்த்துக் கொள்கிறார். இதன்போது ஹீரோயினுக்கும் இளைஞனுக்கு இடையில் காதல் ஏற்பட, அதற்குப் பிறகு வீட்டிற்கு வரும் ஹீரோயினுக்கு அதிர்ச்சி காத்திருக்கும்.


அதாவது, வீட்டிற்கு வரும் ஹீரோயினுக்கு அங்க தனது கணவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவர் தன்னுடைய கள்ளக்காதலினால் தவறு நடந்து விட்டதாகவும் இனி சேர்ந்து வாழலாம் என்றும் ஹீரோயினை அழைக்கிறார். இதன் போது அந்த இளைஞனும் அங்கு வர, அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் மீதிக் கதை.

பொதுவாகவே ஒரு படம் என்றால் 60 முதல் 65 சீன்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் 10 சீனை வைத்துக்கொண்டு 2 மணி நேரம் ஓட்டியுள்ளார்கள். இந்த படம் அரை மணி நேரத்தில் முடியும் குறும்படம் போல் இருக்கிறது. 

அதன் முதல் பாதியில் அந்த இளைஞன் நன்றாக நடித்து இருந்தான். படம் ஓடினதே தெரியவில்லை. ஆனால் இரண்டாவது பாதி மிக காமெடியாக இருந்தது.


விதார்த் கள்ளக்காதலன் போல காட்டுகிறார்கள். ஆனால் அதில் ஒன்றும் சீரியஸாக இல்லை.

இந்தப் படம் ஹாரரா? த்ரில்லரா.?  பேய் படமா? இல்ல சாமி படமா? கிறிஸ்டியன் படமா? ஹிந்து படமா?  இது என்ன படம் என்ற குழப்பம் தான் நீடித்தது.

இந்த படத்தில் பைபிளை காட்டுகிறார்கள், சிலுவையை காட்டுகிறார்கள், அகோரியை  காட்டுகிறார்கள். அந்த குழப்பம் ஒரு பக்கம் இருக்க, 25 நிமிடங்களுக்கு மேல் பாட்டு ஓடுகிறது. அதில் வலுக்கட்டாயமாக பாடலை திணித்தது போல் காட்டப்படுகிறது.

ஆனாலும் ஸ்டார்டிங் மற்றும் கிளைமேக்ஸ் நன்றாக இருந்தது. அதற்காக இந்த படத்தை இரண்டு மணி நேரம் பார்க்க முடியும? மெகா சீரியலை ஸ்லோ மோஷனில் எடுத்து வைத்தது போல் இந்த படம் இருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement