• Nov 14 2024

இயக்குநர் பாரதி ராஜா இப்படியொரு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றாரா?- நண்பர்களுக்கு நடந்த அவமானம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிராமத்து திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபல்யமானவர் தான் பாரதிராஜா. இவர் பதினாறு வயதினிலே என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.இவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை உள்ளிட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

கடந்த பல வருடங்களில் அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. எனவே, தற்போது அவர் திரைப்படங்களை இயக்குவதில்லை. அதேநேரம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.


கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதேநேரம் அவர் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.சில நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து அவரின் சில நண்பர்கள் அவரை சந்திக்க ஆசைப்பட்டார்களாம். 

அவர்களிடம் தொலைபேசியில் பேசிய பாரதிராஜா ஒரு தேதியை சொல்லி தேனிக்கு வந்து விடுங்கள். அங்கே சந்திப்போம் என சொல்ல அவர்கள் சொன்ன தேதியில் அங்கு செல்ல அவர்களுக்காக உணவு, தங்குமிடம் என எல்லாவற்றையும் பாரதிராஜா தயார் செய்து வைத்திருந்தாராம். அவர்களும் சாப்பிட்டுவிட்டு பாரதிராஜாவுக்காக காத்திருக்க பாரதிராஜா அங்கு செல்லவில்லை. ஏனெனில், தேனிக்கு செல்ல வேண்டும் என்பதையே மறந்துவிட்டாராம். எனவே, அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement