லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக படம் மெகா ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
மேலும் இப்படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையால் நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.மேலும் ட்ரெய்லரை ரோகிணி திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி மிகுதியால் திரையரங்கின் சீட்டுக்களை கண்டபடி சேதப்படுத்தினர்.அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதனையடுத்து இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து விஜய் அவரது ரசிகர்களின் சார்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லை ரசிகர்களை கண்டித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என கூறினர்.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில "ரோகிணி தியேட்டரில் பல இருக்கைகள் சேதம். திருப்பூர் தியேட்டரில் ட்ரைலர் பார்க்க கேட்டை தள்ளி.. வெறித்தனமாக ஓட்டம். பல செய்தி சேனல்களில் இவை வெளியாகி, விவாதப்பொருள் ஆகியும் தனது ரசிகர்களை கண்டிக்காமல் விஜய் மௌனம் காக்கிறார்.
இவர்தான் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற போகிறாரா? ஒருவேளை தேர்தலில் வென்றால்.. இந்த விசிலடிச்சான் குஞ்சுகளிடம் மக்கள் என்ன பாடு படுவார்கள்? சமீபத்தில் காந்தி ஜெயந்தியன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை போட்டனர். அகிம்சை வழியில் வாழ்ந்த காந்தி இப்படித்தான் தே**யா பையன் என்று பேச சொன்னாரா? தியேட்டரில் களேபரம் செய்ய சொன்னாரா?
தயவு செய்து இனி தேசத்தலைவர்களுக்கு மரியாதை செய்தால்.. அவர்கள் சொன்னதை விஜய்யும், ரசிக சிகாமணிகளும் வாழ்வில் பின்பற்றட்டும். இல்லாவிட்டால் அவர்களை மதிக்கும் போலி நாடகத்தை நிறுத்துங்கள். இதை பற்றி விஜய் பேசப்போவதில்லை. இப்படி கம்முனு இருந்தா அவரோட வாழ்க்கை ஜம்முனு இருக்கும் போல" என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!