பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 43 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிவாஷினி வெளியேறி தற்போது 15 போட்டியாளர்களே உள்ளார்கள்.
இதில் அடுத்தடுத்த நாட்களில் யார் வெளியேறுவார்? யார் டைட்டிலை பெறுவார் என்று பிக் பாஸ் ரசிகர்கள் இப்போதே யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளதால், முகத்திற்கு நேராக ஒரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் மீது கடுப்பில் உள்ளார்கள்.
பிக் பாஸ் சீசன்6ன் நேற்று திங்கட் கிழமை என்பதால் கேப்டன் பதவிக்கான டாஸ்க், நாமினேஷன் என வீடே சுறுசுறுப்பாக இருந்தது. இதில் தனலட்சுமி, கதிர், மைனாவுக்கும் இடையே கேப்டன் பதவிக்கான போட்டி நடைபெற்றது.மேலும் இதில், மைனா வெற்றி பெற்று இந்த வாரத்தின் கேப்டனார். இதற்கு முன்பே மைனா கேப்டனாக இருந்து உள்ளார்.
இதையடுத்து, இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. மேலும் இதில் தனலட்சுமி பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும், தனம் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அசீம் தனலட்சுமியை நாமினேட் செய்தார். இதையடுத்து, விக்ரமன் தனலட்சுமி எதற்கு எடுத்தாலும் சண்டை போடுவதாக கூறி அவரை நாமினேட் செய்தார்.
ஷிவின் அசீமையும், ரச்சிதா ராபர் மாஸ்டரையும் நாமினேட் செய்தனர். இதில் தனலட்சுமி மற்றும் அசீமை அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் தனலட்சுமி, அசீம் ,ராம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன் ,ராபர்ட் என ஏழு பேர் நாமினேட் ஆகியுயுள்ளார்கள்.
அசீம் மற்றும் தனலட்சுமி அதிகமாக வீட்டிற்குள் சண்டை போட்டாலும் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. இதனால், இவர்கள் இந்த வாரம் வெளியில் போக வாய்ப்பு இல்லை. அதே போல அழுதவாணன் ,மணிகண்டன் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்பதால், அவர்களும் வெளியேற வாய்ப்பில்லை.
மேலும் இதில் டேன்ஜர் ஜோனில் இருப்பது ராபர்ட் மாஸ்டர், கதிர், ராம் தான். கடந்த சில நாட்களாகவே ராம் வீட்டில் மிக்ஸர் சாப்பிட்டு வருவதாக மக்கள் கிண்டலடித்து வரும் நிலையில் இந்த வாரம் ராம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!