லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். மாஸ்டர் கூட்டணியின் அடுத்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக படத்தின் ப்ரீ பிஸ்னெஸ்ஸும் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் பட்ஜெட்டை ரிலீஸுக்கு முன்னதாகவே லியோ எடுத்துவிட்டது என விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் பிரசாத் ஸ்டூடியோ, பையனூரில் நடந்ததைத் தொடர்ந்து தற்போது ஆதித்யராம் ஸ்டூடியோவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமீபத்தில் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக தெரிகிறது.
அதேசமயம் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்கவில்லை 500லிருந்து 800 நடன கலைஞர்கள்தான் பங்கேற்றிருப்பார்கள் என்றும் புதிய தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. பாடல் ஷூட்டிங்கை முடித்த கையோடு தற்போது க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை லோகேஷ் படமாக்கிவருகிறார்.
படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் பெயர் எப்போதோ வெளியான நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக லியோ படத்தின் முதல் பாடல் அதுவும் விஜய் பாடிய நான் ரெடி பாடல் வெளியாகி இருந்தது.முதல் பாடலுக்கே அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது விஜய் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. நல்ல மதிப்பெண் வாங்கிய மாணவர்களை அவர் சந்தித்ததும் இதற்காக தான் என கூறுகின்றனர்.இந்த நிலையில் விஜய் அரசியலில் குதிக்க பிரபல ஜோதிடர் கூறியதை கேட்டு நடந்து வருவதாக பத்திரிக்கையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.ஆனால் இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!