THX 1138 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் ஜார்ஜ் லூகாஸ். இவர் தான் உலகின் நம்பர் வன் கோடீஸ்வர இயக்குநராக இருக்கின்றாராம். இவர் நம்பர் ஒன் கோடீஸ்வர இயக்குநராக மாற காரணமே ஸ்டார் வார்ஸ் சீரிஸ் படங்கள் தான். வேற்று கிரகத்தில் மனிதர்களும், ஜந்துக்களும் உயிர் வாழ்ந்தால் எப்படி இருக்கும், அந்த லேஸர் கத்தியை அறிமுகப்படுத்தியது. பறக்கும் தட்டுக்களையும், வீல் இல்லாத அந்தரத்தில் பறக்கும் பைக்குகளையும் அறிமுகப்படுத்தி உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஸ்டார் வார்ஸ் படங்களின் இயக்குநர் தான் டைட்டானிக், அவதார் படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனையே முந்தி அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரராக திகழ்கிறாராம்.
நம்ம ஊரில் எந்தவொரு இயக்குநரும் ஆயிரம் கோடி சொத்துக்களை கூட வைத்திருக்க மாட்டார்கள். ஒரு சில பாலிவுட் நடிகர்கள் மட்டுமே 1000 கோடி சொத்துக்களை வைத்திருப்பார்கள். இந்நிலையில், ஜார்ஜ் லூகாஸிடம் 60 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 75 வயதாகும் இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் 7.4 பில்லியன் டாலர்களுக்கு அதிகபதியாக பூமியிலேயே குபேரனாக வாழ்ந்து வருகிறார்.
முதலிடத்தில் ஸ்டார் வார்ஸ் இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ் 60 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் உள்ள நிலையில், 4 பில்லியன் டாலர்கள் அதாவது 32 ஆயிரம் கோடி பாதிக்கு பாதி சொத்து வைத்துள்ள இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 2ம் இடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து, இயக்குநர் பீட்டர் ஜாக்சன், 1.5 பில்லியன் டாலர் உடன் 3ம் இடத்திலும், 4ம் இடத்தில் டைலர் பெர்ரி 1 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உள்ளார். ஜேம்ஸ் கேமரூன் 1 பில்லியன் டாலருக்கு சற்றே குறைவாக சொத்துக்களை கொண்டு 5ம் இடத்தை பிடித்துள்ளார். Forbes வெளியிட்டுள்ள இந்த சொத்துக் குறித்த தகவல் உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!