• Nov 17 2024

குக்வித்கேமாளியில் இருந்து விலகுகிறாரா..? - Hospital-லில் இருந்து ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

டிக் டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.

இடையில் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதில் பங்குபெற்றார், ஆனால் சில நாட்களிலேயே என்னால் இதில் கலந்துகொள்ள முடியாது என கூறி வெளியேறினார்.

அதன்பிறகு சில படங்கள், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து இப்போது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், ஆதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

தற்போது ஹாஸ்பிட்டலில் இருந்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ஹாஸ்பிட்டலில் இருக்கின்றேன் எனக் கூறியும் பல பேர் எப்பிடி கெமண்ட் பண்ணி இருக்கிறீர்கள்.ஒரு நாலு நாள் தான் நான் ஹாஸ்பிட்டலில் இருந்தேன்.நான் இப்போது குக்வித் கோமாளியில் பங்கு பற்றுவதால் தான் போக முடியாமல் போனது.ஆனால் 26ஆம் தேதி குக்வித்கோமாளி நிகழ்ச்சிக்கு செல்வேன் என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் பலர் இவரை கலாய்ப்பதற்காக பல கெமண்ட்களை போட்டதால் கடுப்பாகி பேசி இருந்தார்.

 

Advertisement

Advertisement