• Sep 20 2024

ஹிந்தி திரைப்படம் தான் இந்திய சினிமாவா?- அவமானமாகக் கருதுகின்றேன்-நடிகர் சிரஞ்சீவி கொந்தளிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக ஹிந்தி சினிமாவை தேசிய மொழியாக்க வேண்டும் என சில பிரபலங்கள் தெரிவித்து வந்தாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியும் இந்த கருத்துக்கு எதிராக பேசியுள்ளார்.

அதாவது தற்போது, நீண்ட காலமாக, ஹிந்தி சினிமாவை மட்டுமே இந்திய சினிமாவாக முன்னிறுத்துவது, தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த ஒரு நடிகராக எனக்கு “மிகவும் அவமானம்” என்று கொந்தளித்துள்ளார்.

மேலும் ஹிந்தியை ஒரு தேசிய மொழியாக திணிக்கும் முயற்சிகளுக்கு எதிராக சிரஞ்சீவியின் இந்த உணர்ச்சிகரமான உரை, அவரது படமான ஆச்சார்யாவின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வில் நடந்தது.

அந்த நிகழ்வில் சிரஞ்சீவி பேசுகையில், கடந்த 1988ல் நாக பாபுவை வைத்து ருத்ரவீணை என்ற படத்தை தயாரித்தேன் பாலச்சந்தர் அப்படத்தை இயக்கினார். தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை இப்படம் வென்றது. இந்த விருதை பெற டெல்லி சென்றோம் என்று தெலுங்கில் கூறினார்.

மேலும், ஹிந்தி சினிமாவை மட்டுமே இந்திய சினிமா என்று முன்னிறுத்தினார்கள். மற்றவை பிராந்திய மொழி சினிமா என்று நிராகரித்தார்கள். அதன் பங்களிப்பை அங்கீகரிக்க கூட கவலைப்படவில்லை என்று அவர் கூறினார். ஆனால், பாகுபலி 1, பாகுபலி 2 மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைப்படுத்தியதாக சிரஞ்சீவி கூறியுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement