• Nov 19 2024

ஹீரோவை வாடா போடா என்று பேசியது ஒரு குற்றமா?- ஷுட்டிங் ஸ்பாட்டில் ஆர்ஜே பாலாஜிக்கு நடந்த அவமானம்-கூல் பண்ணிய இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ரேடியோ ஜாக்கியாக மட்டுமின்றி கிரிக்கெட் வர்ணனையாளராகவும் தன்னுடைய கெரியரை ஆரம்பித்தவர் தான் ஆர்.ஜே பாலாஜி. இதனை அடுத்து சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.

அதன்பின் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விசேஷம் படங்களில் ஹீரோவாகவும் நடித்து ஜெயித்தவர். இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் கூறிய விடயம் தற்பொழுது  வைரலாகி வருகின்றது. அதாவது நான் ஒரு படத்தில் நடித்த போது அந்த படத்தின் ஹீரோவுடன் சகஜமாக பழகினேன். என்னைவிட நான்கைந்து வயது மூத்தவர் ஹீரோ என்றாலும், அவரும் நட்பாக பழகியதால், வாடா போடா என்றுதான் எங்களுக்குள் பேசிக்கொள்வோம். 


ஷூட்டிங் ஸ்பாட்டில் படத்தின் இயக்குநர், ஹீரோ, நான் மூவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம்.அப்போது அந்த படத்தில் நடித்த சீனியர் நடிகர் ஒருவர் என்னை தனியாக அழைத்தார். என்ன படத்தோட ஹீரோவை பேர் சொல்லிக் கூப்பிடறீங்க, சார் ன்னு கூப்பிடணும். டைரக்டரோட சேர்ந்து ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடறீங்க? அவங்க அப்படித்தான் உட்காருங்க, வாங்க, சாப்பிடுங்கன்னு கூப்பிடுவாங்க, இல்லீங்க பரவாயில்லைங்கன்னு நீங்க ஒதுங்கி போயிடணும் என்றார்.

இதுபற்றி அந்த டைரக்டரிடமும், ஹீரோவிடமும் நான் பேசினேன். இப்படித்தான் சினிமா இருக்குமா என்றும் கேட்டேன். அதற்கு டைரக்டர் சொன்ன பதில், அதெல்லாம் பழைய சினிமா, அப்படியெல்லாம் எதுவும் இல்லே. நான் அந்த நடிகரை சாப்பிட கூப்பிட்டேனா, கூப்பிட்டாலும் சாப்பிட வரமாட்டார் இதையெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க, என்றார்.


அப்படி சொன்ன டைரக்டர் யாருன்னா அவரு டைரக்டர் சுந்தர் சி. நான் சொன்ன ஹீரோ சித்தார்த் தான். அவங்க யதார்த்தமா இருந்தாலும் மத்தவங்க, வேற மாதிரி கிரியேட் பண்ணி விட்டுறாங்க, என தனது ஆதங்கத்தை  ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement