தமிழ் சினிமாவில் 90 களில் இருந்து ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்தவர் தான் நாசர்.இவர் தமிழில் மட்டுமல்லாது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாசர், அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களும் மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், "நான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் கிடையாது. ஆனால் சூழ்நிலை என்னை மாற்றிவிட்டது. என் அப்பாவிற்கு நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது."
என்னுடைய மூக்கு கிளி மூக்கு போன்று இருக்கிறது என்று பலரும் கூறியுள்ளனர். மேலும் நான் பள்ளியில் படிக்கும் போது என்னை கிளி மூக்கு என்று தான் அழைப்பார்கள். அதுமட்டுமின்றி என்னுடைய நெத்தியும் பெரிதாக தோற்றமளிக்கும்."
"இதனால் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானது. பட வாய்ப்பு தேட கூட தயங்கினேன். இயக்குநர் பாலசந்தர் சார் தான் திரைத்துறையில் வாழ்க்கை கொடுத்தார்" என்று கூறியுள்ளார் நாசர்.மேலும் தனது விடா முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!