நடிகர் விஜய் விரைவில் அரசியலில் கால் பாதிக்கவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. இதனால் அவரின் அரசியல் ஆசையை தீவிரப்படுத்தும் வகையில் ரசிகர்களும் அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
அந்தவகையில் விஜய்யை நாளைய முதல்வராக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து பல போஸ்டர்களை அடித்து வருகின்றனர். இவ்வாறாக அரசியல் சார் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகின்ற அதேநேரம், இவர் நடித்த 'லியோ' திரைப்படமும் வெகு விரைவில் ரிலீசாகவுள்ளது.
இதனை முன்னிட்டு சமீபத்தில் லியோ ட்ரெய்லர் ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட்டது. ஆனால் ட்ரெய்லரில் விஜய் செய்த சாகசங்களை அவரது ரசிகர்கள் ரோகிணி தியேட்டரில் ரியலாகவே செய்துமுடித்தனர். இதனால் ரோகிணி தியேட்டர் போர்க்களம் போல மாறியதோடு, 400 இருக்கைகள் சேதமாகியதோடு, மொத்தமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோகிணி தியேட்டருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஆனது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து இருந்தனர். அந்தவகையில் சவுக்கு சங்கரும் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது "ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் நடந்துகொண்டவிதம் மிக மோசமான செயல், இந்த பசங்களை வச்சிக்கிட்டுதான் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகணும்ன்னு ஆசைப்படுகிறாரா, தியேட்டரில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என தெரியாத இதுபோன்ற ரசிகர்களை வைத்துக்கொண்டு விஜய் முதலமைச்சர் கனவு காண்பது வேடிக்கையாக இருக்கிறது" எனவும் தாறுமாறாக விளாசித் தள்ளியுள்ளார் சவுக்கு சங்கர்.
Listen News!