இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது.
இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தது.
இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார்.பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், ஜிபி முத்து, சிபி, மமதி சாரி ஆகியோரும் நடிகர்கள் சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், ஜி.எம் சுந்தர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
இந்நிலையில் உலகம் முழுவதும் ரூ 125 கோடிகளுக்கு மேல் துணிவு வசூல் செய்துவிட்டதாம்.இதனால் இன்னும் 40 கோடி வசூல் செய்தாலே படம் ஹிட் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!