தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி.இவர் அஜித் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான 'அவள் வருவாளா' படத்தில் டான்சராக தோன்றி இருந்தார்.பின்னர் சென்னை மற்றும் பெங்களூருவில் அரசு கண்காட்சிகளுக்கு ஒரு நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
பின்னர் இயக்குநர் நெல்சன் திலீப் குமாருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தில் நடித்திருந்தார்.இவரின் வித்தியாசமான பேச்சு வழக்கு, உடல்மொழி போன்றவை வெகு விரைவாகவே ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமடைய செய்தது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் நடித்து சிறந்த காமெடியனாக வலம் வருகின்றார்.தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வரும் இவர், சொன்னபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்கு தற்போது தயாரிப்பாளர் மணிகண்டன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, நடிகர் ரெடின் கிங்ஸ்லியால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும்,'லெக் பீஸ்' படத்தில் நடிக்க 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், அந்த தொகையை மீட்டு தரும்படியும் அதுவரை அவர் நடிக்க தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே , இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் நடித்து கொடுப்பதாக வடிவேலு கூறியபின்னர்... அதில் இருந்து பின் வாங்கியதற்காகவும், வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் நடிக்க தடை போட்ட நிலையில், வளர்ந்து வரும் காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கும் இந்த நிலை ஏற்படுமா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!