ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் பிள்ளைகளால் படும் கஷ்டத்தை மையமாக கொண்டு ஷு தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் தவமாய் தவமிருந்து .இந்த சிரியலில் மார்கண்டேயனாக வரும் கதாபாத்திரம் குடும்ப தலைவராகவும், அவருடைய மனைவி சீதா குடும்ப தலைவியாகவும் இருந்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த சீரியலில் மார்க்கண்டேயன் கதாபாத்திரத்தில் வரும் நடித்து வரும் சிவகுமார் பிரபல சேனல் ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது நான் என்னுடைய 25 வருட சினிமா வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கதாபாத்திரமாக நான் இதனை பார்க்கிறேன். நான் இந்த வயதில் கதாநாயகனாக நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு படம் இயக்குவதுதான் குறிக்கோளாக இருந்தது. நான் இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு என்னுடைய நண்பர்கள் மூலம் தான் வந்தது.
ஆனால் இயக்குநராகுவது கனவாக இருந்த நேரத்தில் இந்த சீரியலில் நடிக்க கொஞ்சம் தயங்கினேன். லெஜண்ட் சரவணா படத்துல துணை இயக்குநராவும், படத்தில் நடித்ததற்கு பிறகு எந்த வேலையும் இல்லை ஆனால் குடும்பம் இருக்கிறது எனவே இந்த சீரியலில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்த சீரியலில் வாய்ப்பு கிடைத்தும் சீரியலில் இயக்குநரை சென்று பார்த்தேன். என்னுடைய வயது கேட்டார்கள் நான் முதலில் இந்த கதாபாத்திரம் சரியாக வராது என்று நினைத்தேன்.
ஆனால் என்னை சாந்தமான அப்பா கதாபாத்திரமாக இருக்கும் என்று வாய்ப்பு கொடுத்தார்கள். முதலில் நான் தான் இந்த சீரியலின் கதாநாயகன் என்று கூறினார்கள். நான் ஏதோ சும்மா சொல்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் முன்னர் இந்த சீரியலின் பெயர் மார்க்கண்டேயன் என இருந்தது பின்னர் தான் “தவமாய் தவமிருந்து” என மாறியது இந்த சீரியலை பார்க்கும் அனைவரும் இதில் வருபவர்களை அவர்களுடைய குடும்பமாகத்தான் பார்க்கின்றனர்.
நான் இளம் வயதில் கதாநாயகனாக நடித்திருந்தால் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. இந்த சீரியலில் நான் அப்பா, ஆக்ஷன் ஹீரோ, காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என்று மற்ற சீரியல்களை போல இல்லாமல் கலந்த கலவையான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். அத்தோடு இந்த சிரியலில் இரண்டு நாட்களில் சிலம்பம் கற்றுக்கொண்டு சிலம்பமும் இந்த சிரியலில் சுற்றியிருக்கிறேன்.
நான் வேலை செய்த பெரும்பாலான படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி அந்த படத்தில் நடித்தும் இருக்கிறேன். கதாநாயகியை திருமணம் செய்பவர் தான் கதாநாயகன் என்றால் “காதல்” படத்தில் நான் தான் கதாநாயகன். என்னேற்றால் நான் சந்தியாவை தேர்ந்தெடுத்தேன். அவரது அம்மா ஒரு அழகு நிலையம் வைத்திருந்தார்கள் அங்கே தான் அவரை நான் பார்த்தேன். சந்தியாவை படத்தில் நடிக்க கேட்டதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால் எப்படியோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்கள்.
தற்போது நான் எப்படியாவது ஒரு எதார்த்தத்துடன் கூடிய கமர்சியல் படத்தை இயக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அதற்காக ஒரு தயாரிப்பாளரிடம் என்னுடைய கதையா சொன்னேன் பின்னர் அனைத்தும் கைகூடி வரும் நேரத்தில் சில காரணங்களினால் அந்த படம் தள்ளிப்போனது. எனக்கும் குடும்பம் இருக்கிறது அதனால் கிடைக்கும் வேலையை செய்தாக வேண்டும். இருந்தாலும் என்னுடைய இயக்குநர் கனவை நோக்கி தற்போது பயணித்து கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!