தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீனா ரவி. இவர் தன்னுடைய இரண்டு வயதிலேயே டப்பிங் ஆர்டிஸ்ட் பணியை தொடங்கினார். இவர் பல ஆர்டிஸ்ட் குரல் கொடுத்து இருக்கிறார்.
அதிலும், ஓ காதல் கண்மணி, வேலையில்லாபட்டதாரி, பிரேமம், உத்தம வில்லன் ,போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ரவீனா குரல் கொடுத்து இருக்கிறார்.மேலும், இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு என பல மொழி நடிகைகளுக்கும் குரல் கொடுத்து உள்ளார். அதேபோல் ரவீனா தாய் ஸ்ரீஜா அவர்களும் அதேபோல் உலகில் மிக பிரபலமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீனா அவர்கள் ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், இவர் வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.
கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தில் நாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாகவும், யோகி பாபுவின் மனைவியாகவும் ரவீனா நடித்து இருந்தார். தொடர்ந்து மாவீரன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் இவர் பேட்டியளித்திருந்தார். அதில் பேசும் போது சாட்டை படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நான் காலேஜ் படிச்சிட்டு இருந்ததால் அதை அப்பிடியே விட்டிட்டேன். இப்போது தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் நடித்து வருகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Listen News!