• Nov 14 2024

கணவரின் கணக்கு கேக்குறது சரியா.? தவறா.? - நீயா நானா ஷோவில் நடந்த சுவாரஸ்ய விவாவதம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது நீயா நானா ஷோ.இந்த நிகழ்ச்சியின் சிறப்புக்கு முழுமுதல் காரணமாக நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார். 

 ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த நிகழ்ச்சியில் விவாதங்கள் நடத்தப்படுகின்றன. ஒரு விஷயத்தில் இருதரப்பு நியாயம் என்பது இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தி வருகிறது.

இந்த வாரமும் வித்தியாசமான தலைப்புடன்தான் கோபிநாத் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். கணவரின் பணம் என் பணம் மற்றும் பெண்களுக்கென்று தனிப்பட்ட பொருளாதார சுதந்திரம் வேண்டும் என்ற தலைப்பில் இன்றைய நிகழ்ச்சி களைகட்டியது. 

கணவரின் பணம் தங்களின் பணம் என்று எந்த தருணத்தில் உணர்ந்தீர்கள் என்று கோபிநாத் கேள்வி எழுப்ப, குழந்தை பிறப்பு உள்ளிட்ட தருணங்களில் வேலைக்கு போகாத சமயத்திலும், வீட்டில் அதேபோன்ற லைஃப் ஸ்டைலை தாங்கள் மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டபோது கணவரின் பணம் தங்களது பணம்தான் என்று உணர நேர்ந்ததாக ஒருவர் பெருமையுடன் குறிப்பிட்டார். இதேபோல சம்பளம் கிடைத்தவுடன், லோன் போன்றவற்றை செலுத்திவிட்டு மீதமுள்ள பணத்தை தன்னுடைய அக்கவுண்டிற்கு தன்னுடைய கணவர் மாற்றி விடுவார் என்றும், அவருடைய தேவைக்குக்கூட தன்னிடம்தான் வாங்கிக் கொள்வார் என்றும் மற்றொருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தான் வீட்டிற்கு ஒரே பெண் என்றும் தன்னுடைய அப்பா இறந்தபோது, அவர் விட்டு சென்ற கடனை, தன்னுடைய கணவர்தான் அடைத்தார் என்றும், இதுவரை இதுகுறித்து ஒருவார்த்தைகூட கேள்வி கேட்கவில்லை என்றும் மற்றொரு பெண் மகிழ்ச்சியுடன் சுட்டிக் காட்டினார். இத்தகைய தருணங்கள் கணவரின் பணம் தங்களின் பணம் என்று உணர வைத்ததாக இவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் கணவர் இவ்வாறு கொடுக்கும் பணத்திற்கு கணக்கு கேட்பதாகவும் அதனால் அந்தப் பணத்தை தன்னுடைய பணம் என்று உணர முடியாமல் போவதாகவும் எதிர்தரப்பினர் குற்றம் சாட்டினர்.

ஆனால் ஒவ்வொரு செலவிற்கும் கணக்கு மேற்கொள்வது சிறப்பானது என்றும் இதன்மூலம் அந்த பணத்தை நிர்வகிப்பதில் ஒரு நிதானம் ஏற்படும் என்றும் அதனால் கணக்கு கேட்டால் அதை கொடுப்பது சாத்தியம்தான் என்றும் எதிர்தரப்பினர் கூறினர். இந்தக் கருத்தை கோபிநாத்தும் ஏற்றுக்கொண்டு  பேசினார்.


Advertisement

Advertisement