பாக்கியலட்சுமி சீரியலை பார்ப்பவர்கள் அனைவரும் கோபியை திட்டாத நாளே இல்லை. தினமும் எபிசோடை பார்த்து விட்டு கோபி ரோலை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட்டம் இங்கு ஏராளம். சின்னத்திரை சீரியல் வரலாற்றில் கதையின் வில்லனும் ஹீரோவும் ஒருவரே என்றால் அது கோபி கதாபாத்திரம் தான். மனைவியை ஏமாற்றி, காதலியுடன் ஊர் சுற்றுவது, அவரை 2 வது கல்யாணம் செய்ய துடிப்பது அதற்காக மொத்த குடும்பத்தையும் ஏமாற்றுவது என கோபியின் தகிடுத்தத்தம் இந்த சீரியலின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் என்றே சொல்லலாம்.
கோபியாக உருவம் பெற்றவரின் உண்மையான பெயர் சதீஷ். இவர் 1979ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். மேலும் இவர் பள்ளிப்படிப்பெல்லாமே சென்னையில் தான் முடித்துள்ளார்.
படிப்பிற்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு தான் சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்திருக்கிறார். இவர் சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் என்றியானார்.
இவரின் முதல் திரைப்படம் மின்சாரப்பபூவே, மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணப்பரிசு (2), மகாராணி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.
இந்த எல்லா சீரியல்களிலும் நடித்து கிடைக்காத திருப்புமுனை தான் பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்தது. இவரின் உண்மையான பெயர் சதீஷ் என்றாலும் தற்போதும் அனைவரிடமும் கோபியாகத்தான் அறியப்படுகிறார்.
அத்தோடு சீரியல்களில் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் தோன்றியிருக்கிறார். இவற்றில் தனி ஒருவன், இருமுகன், ராமானுஜம், போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவ்வாறு பலர் திட்டி தீர்த்து வந்தாலும் கோபியின் வாழ்க்ககையில் பல சோகங்களும் இடம்பெற்றுள்ளது.அதாவது இவர் 5 வயதில் சொந்த தம்பியை இழந்துள்ளார்.அம்மா - அப்பாவை விபத்தில் பறிக்கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் யார் ஆதரவும் இன்றி 2 சொக்கா, டவுசருடன் சென்னையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார். அவர் தான் இவரை வளர்த்துள்ளார்.
இவருக்கு தமிழ் சொல்லி கொடுத்து, பேச சொல்லி கொடுத்து அவரை ஆளாக்கி உள்ளார். அவர் மிகச் சிறந்த பெண்மணி. தமிழ் வெறும் மொழி மட்டுமில்லை அது ஒரு கலாச்சாரம், சக்தி எல்லாமே என கோபியே உருகி பேசி உள்ளார்.
இதுவரை கோபியை திட்டி தீர்த்த ரசிகர்கள் அவரின் சோகமான கதையை கேட்டதும் அவருக்கு ஆதரவாக சில உருக்கமாக சமூகவலைத்தளத்தில் பேசி வருகின்றார்.
Listen News!