சிம்பு தற்பொழுது 'வெந்து தணிந்தது காடு' பத்து தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வருவதோடு வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து வருகின்றார்.
கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
எனினும் இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு பாகமாக உருவாக்க கௌதம் மேனன் திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போது முதல் பாகம் மட்டுமே ரிலீசாகிறது என்றும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு காமன் மேன் எப்படி கொள்ளைக்கூட்டத் தலைவன் ஆக மாறினார் என்பது முதல் பாகத்திலும், கொள்ளைக்கூட்டத் தலைவன் ஆக மாறிய பின்னர் அவருடைய நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது என்பதும் இரண்டாம் பாகத்தில் உள்ள கதையாக இருக்கிறது என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இரண்டாம் பாகத்தில் சிம்புவின் கெட்டப் வேற லெவல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
Listen News!