90-களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக என் ராசாவின் மனதிலே என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார் மீனா.
இதனைத் தொடர்ந்து இவர் ரஜினி, கமல், அஜித், சரத்குமார் போன்ற முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.தமிழைத் தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவர் கடந்த 2009 -ம் ஆண்டு தொழிலதிபர் வித்தயாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.திருமணத்திற்குப் பின்னரும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த வித்யாசாகர், கடந்த ஆண்டு ஜூன் 28 -ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரை இழந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா, சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்து வருகிறார்.
இந்நிலையில் 'மீனா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார்' என பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. ஆனால் இது பொய்யான தகவல் என்று முற்றுப்புள்ளி வைத்தார் மீனா.தற்போது மீண்டும் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில், 'மீனாவின் குடும்ப நண்பரை திருமணம் செய்து கொள்ள போகிறார், என தற்போது தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. ஆனால் இந்த செய்தியும் வதந்தி என மீனாவின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
Listen News!