நடிகை சுனைனா 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஹீரோயினாக நடிக்க துவங்கினார். குறிப்பாக தமிழில்,'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தில்,புதுமுக ஹீரோயினாக அறிமுகமாகினார்.
மற்ற மொழிகளை விட தமிழில், நடிக்க சுனைனாவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி , நீர் பறவை, சமர், வன்மம், தெறி நம்பியார், போன்ற பல படங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தார். ஆனால் இவரால், முன்னணி ஹீரோயின் என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை.
சமீப காலமாக கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் சுனேனா, கடைசியாக விஷாலுக்கு ஜோடியாக லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு, அனைவர் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இதை தொடர்ந்து ரெஜினா என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சுனைனா.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், சுனைனாவை காணவில்லை என அவர் நடித்து வரும் 'ரெஜினா' படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட, அது தீயாகப் பரவியது. இதில் சுனைனாவின் செல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்டாரா என்ற கேள்வியுடன் அந்த வீடியோ வைரலானது.
இப்படி காணாமல் போனதாக சுனைனா பற்றி வெளியான தகவலை தொடர்ந்து ரசிகர்களும், நெட்டிசன்களும் அவரை காப்பாற்ற வேண்டும் என தங்களின் கருத்துக்களை வெளியிட்டுவந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தங்களின் விசாரணையை துவங்கினர். சுனைனா எங்கெல்லாம் சென்றார், என்பது குறித்தும் அவர் தோழிகளுடன் நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் யாரை சந்தித்தார்? என்பது பற்றி தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
போலீசாரம் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்த நிலையில்... இந்த செய்தியை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு நேரடியாக சென்று விசாரித்தனர். அப்போதுதான் இந்த வீடியோ தொடர்பான உண்மை தகவல் தெரியவந்தது. சமீப காலமாகவே படங்களை புரோமோட் செய்ய படக்குழுவினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அந்த தகவல் இந்த கடத்தல் வீடியோ வெளியிட்டது கூட, படத்தின் புரோமோஷனை முன்னிட்டு தான் என தெரியவந்தது.
விரைவில் இதுகுறித்த தகவலை வெளியிட படக்குழு நினைத்த நிலையில், போலீசாருக்கு தேவையில்லாத அலைச்சலை கொடுத்ததற்கு, தயாரிப்பு தரப்பில் தங்களின் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர். படத்தை வித்தியாசமாக புரமோட் செய்ய இப்படி சுனைனா உண்மையில் கடத்தப்பட்டது போல் வீடியோ வெளியிட்டதாக கூறியதை தொடர்ந்து, இந்த தகவல் போலிசாருகே அதிர்ச்சிகரமாக இருந்தது. மேலும் இது போல் படத்தை ப்ரோமோஷன் செய்ய வேண்டாம் என பலர் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!