• Sep 20 2024

மார்க் ஆண்டனி படத்திற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டது உண்மைதானா?- அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட விஷால்

stella / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.டைம் ட்ராவலை பின்னனியாக வைத்து சயின்ஸ் பிக்ஸன் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இப்படம் ரசிகர்களுக்கு செம்ம என்டர்டெயின்மெண்ட் ட்ரீட்டாக அமைந்தது.முக்கியமாக எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவான இந்தப் படம், இந்தி உட்பட மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸானது. மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். 


இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் சென்சாருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக விஷால் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதாவது சினிமாவில் லஞ்சம் கொடுப்பதாக காட்சிகள் வருவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நிஜ வாழ்க்கையில் லஞ்சம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

மார்க் ஆண்டனி படத்தின் இந்தி வெர்ஷன் சென்சாருக்காக, மும்பை CBFC அலுவலகத்தில் 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். மார்க் ஆண்டனி சென்சார் வாங்க மீடியேட்டராக இருந்த மேனகாவுக்கு பணம் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சரும் பிரதமர் மோடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மேலும், லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் யாருடைய வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டது என்ற விவரங்களையும் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். விஷாலின் இந்த டுவிட்டர் பதிவை ரசிகர்கள் அவர் துணிவாக புகார் கொடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement