• Nov 10 2024

அரசியலில் களமிறங்குவது உண்மையா..? 234 தொகுதிகளுக்கும் அதிரடி உத்தரவு போட்ட விஜய்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் குறித்து அடிக்கடி அரசியல் குறித்த தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் எனக் கூறப்படுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் சில அரசியல் சார்ந்த விஷயங்களையும் அவர் சமீபகாலமாக தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் தீவிரமாக செய்து வருகிறார்.


இந்த நிலையில் தற்போது விஜய் தனது மக்கள் இயக்கம் குழுவினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றினைப் போட்டுள்ளார். அதாவது இதுகுறித்து வெளியான அறிக்கையில் "உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று "உலக பட்டினி தினம்" அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.


எனவே விஜய்யின் சொல்லுக்கிணங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக "தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்" திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement