• Nov 14 2024

அதர்வா, அருள்நிதிக்கு நன்றி கூறிய ஆரி-நெஞ்சுக்கு நீதி படம் தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிக்கள் 15’. இந்த படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஒன்று.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். படத்தில் நேர்மையான ASP அதிகாரியாக விஜயராகவன் என்ற கதாபத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆரி அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…

நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். சமூகநீதியை சரி சமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி மற்றும் ஒன்றை வைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக ஜாதி அரசியல் படமல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி. ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

அத்தோடு மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னால் ஜாதி இருக்கு. ஆனால், இங்கு பெயருக்கு பின்னால் ஜாதி இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் இப்படி ஜாதியை தூண்டும் வகையில் படம் எடுக்கிறீர்கள்? என்று பலர் கேட்கிறார்கள். அத்தோடு நாம் பெயரில் மட்டுமே ஜாதியை ஒழித்து விட்டோம். ஆனால், நம் மனதில் ஜாதி அப்படியேதான் இருக்கிறது. ஜாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம் எந்த சாதியில் பிறந்தவன் என்பது பிரச்சினை அல்ல.

ஆனால், ஜாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பார்ப்பது தான் இங்கு பிரச்சனை. அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியில் தான் இந்த படம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

மேலும் இப்படி இவர் அளித்திருந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement