• Sep 20 2024

'இந்தியன் 2' படத்திற்காக கமல் இப்படியெல்லாம் கஸ்டப்படுகிறாரா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

'விக்ரம்' படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் தற்போது 'இந்தியன் 2' படம் உருவாகி வருகிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. 

 பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'இந்தியன் 2' படம் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் பேசப்பட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்தப்படத்தில் வரும் வயதான கேரக்டருக்காக கமல் தினமும் நான்கு மணிநேரம் மேக்கப் போடுகிறாராம். இந்த மேக்கப் ஆறு மணிநேரம் மட்டுமே இருக்கும் என்பதால் அதற்குள் படப்பிடிப்பையும் நிறைய செய்ய வேண்டுமாம். மேலும் இந்த மேக்கப்பில் இருக்கும் போது திட உணவு எதுவும் எடுத்துக்கொள்ள முடியாதாம்.

இடையில் ஜுஸ் போன்ற திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள முடியுமாம். கமல் இந்த வயதில் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு நடிப்பது மொத்த குழுவுக்குமே ஆச்சரியமாம். 

இந்நிலையில் தற்போது 'இந்தியன் 2' படத்தில் கமலின் போர்ஷன் கிட்டத்தட்ட முடிந்துள்ளதால் மொத்த படக்குழுவும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளதாம். வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ள இந்த தகவல் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற செய்துள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement

Advertisement