• Sep 20 2024

தெலுங்கில் ரிலீஸ் ஆகிறதா கார்த்தியின் விருமன்? வெளியானது தகவல்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருமன் திரைப்படம் ரிலீஸை முன்தள்ளியுள்ளது.

இந்நிலையில் கார்த்தியின் விருமன் திரைப்படம் தெலுங்கில் ரிலீஸாகாது என தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு வழக்கமாக கார்த்தியின் படங்கள் தெலுங்கில் டப் ஆகி ரிலீஸ் ஆகும்.

ஏனென்றால் கார்த்திக்கு தெலுங்கில் கணிசமான மார்க்கெட் உள்ளது. ஆனால் இந்தமுறை விருமன் திரைப்படம் தெலுங்கில் ரிலீஸாகாததற்கு காரணம் சமீபகாலமாக தெலுங்கு படங்கள் திரையரங்குகளில் ப்ளாப் ஆகி வருகின்றன. எனினும் தற்போது அங்கு ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், விருமன் ரிலீஸ் ஆகாது என கூறப்படுகிறது

அதற்கேற்றார்போல விருமன் படத்தின் டிரைலரோ பாடலோ தெலுங்கில் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement